2025 ஜூலை 16, புதன்கிழமை

ஏமாற்றத்துடன் ஞானசாரர்

Editorial   / 2018 ஒக்டோபர் 05 , பி.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர், தனக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனைக்கு எதிராக, தாக்கல் செய்திருந்த மேன் முறையீட்டு மனு, உயர்நீதிமன்றத்தால் இன்று(05), நிராகரிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில், ஞானசார தேரருக்கு 6 வருட கடூழிய சிறைத்தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கியதுடன், அதனை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.

இந்நிலையில், ஞானசாரர் தனக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனையிலிருந்த தன்னை விடுவிக்க கோரி, குறித்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.

ஈவா வனசுந்தர,நலின் பெரேரா,பிரியந்த ஜயவர்தன ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில், குறித்த மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, பெரும்பான்மை தீர்ப்புக்கமைய அது நிராகரிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .