Kogilavani / 2016 டிசெம்பர் 30 , மு.ப. 05:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடமலை ராஜ்குமார்
திருகோணமலை சீனக்குடா இந்திய பெற்றோலிய கூட்டத்தாபனப் பகுதியில் உள்ள எரிபொருள் சேமிப்பு கிடங்குகளைப் பழுதுபார்க்க, இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபன பணியாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் ஏற்பட்ட முறுகல் நிலையைத் தொடர்ந்து, இலங்கை கூட்டறவு அதிகாரிகளால் சீனக்குடா பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் சேமிப்பு நிலையமான சீனக்குடா எரிபொருள் சேமிப்பு மற்றும் மொத்த விநியோக நிலையம், பல ஆண்டகளுக்கு முன்னர், இந்திய பெற்றொலியக் கூட்டுத்தாபனத்துக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டது.
இந்நிலையில், அங்குள்ள எரிபொருள் சேமிப்பு கிடங்குகளை பழுதுபார்க்கும் நடவடிக்கையை, இலங்கை பெற்றொலியக் கூட்டத்தாபனத் தலைவர் முன்னெடுத்தபோது, அதற்கு இந்திய பெற்றொலிய கூட்டத்தாபன அதிகாரிகள் அனுமதி மறுத்தமையால், இது தொடர்பாக சீனக்குடா பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில், பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
8 minute ago
20 minute ago
27 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
20 minute ago
27 minute ago