2025 ஜூலை 07, திங்கட்கிழமை

‘ஐ.தே.க ஊடகங்களுக்கு அழுத்தம் விடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது’

ஆர்.மகேஸ்வரி   / 2018 நவம்பர் 27 , பி.ப. 03:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் கபீர் ஹாசிம் சகல ஊடகங்களுக்கும் அறிக்கை ஒன்றை வெளியிட்டு, தற்போது நாட்டில் அரசாங்கம் ஒன்று இல்லாததால் எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரையும் அமைச்சர், பிரதியமைச்சர், இராஜாங்க அமைச்சர் என விளித்து செய்தி வெளியிட வேண்டாமென்றும், அவ்வாறு வெளியிடும் ஊடக நிறுவனங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தெரிவித்துள்ளமையை வன்மையாகக் கண்டிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.

இன்று (27)  கொழும்பிலுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டப்  போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர்,

ஜனநாயகம் பற்றி பேசும் ஐக்கிய தேசியக் கட்சி ஊடகங்களுக்கு அழுத்தங்ககள் பிரயோகிக்கக் கூடாது. இதை நாம் வன்மையாகக் கண்டிப்பதோடு, ஊடகங்களுக்கு ஆதரவாக நாம் செயற்படுவோம் என்றார்.

அத்துடன் கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி புதிய பிரதமர் நியமனத்துடன் வழங்கப்பட்ட அமைச்சுப் பொறுப்புக்கள் வர்த்தமானியில்  வெளியிடப்பட்டுள்ள நிலையில், புதிய அமைச்சுப் பதவிகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் இதற்கு எதிராக உயர்நீதிமன்றத்துக்குச் செல்லலாம். ஆனால் இதற்கு எதிராக பேசுபவர்கள் யாரும் இதுவரை உயர்நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யவில்லை என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .