2025 ஜூலை 07, திங்கட்கிழமை

‘ஐ.தே.கட்சியை மாத்திரமே கரு பாதுகாக்கிறார்’

Editorial   / 2018 நவம்பர் 21 , பி.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

சபாநாயகர் கரு ஜயசூரிய நாடாளுமன்றத்தில் உள்ள 225 உறுப்பினர்களையும் பாதுகாக்காமல், ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களை மாத்திரம் பாதுகாக்க நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்த ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வீரகுமார திசாநாயக்க சபாநாயகர் நடுநிலமை இல்லையென்றும் தெரிவித்தார்.

மருதானையில் உள்ள சுதந்திரக்கட்சியின் தலைமையகத்தில் இன்று (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்​கொண்டப் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து அங்கு கருத்துத் தெரிவித்த அவர்,

ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டுமெனில், சபாநாயகர் கரு ஜயசூரிய பதவி விலகவேண்டும். சபாநாயகர் பதவிக்காக தகுந்த ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என்றார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .