2025 மே 19, திங்கட்கிழமை

ஐ.நா தீர்மானம் தொடர்பான விவாதத்தில் மஹிந்த கலந்து கொள்ளவில்லை

Thipaan   / 2015 ஒக்டோபர் 24 , மு.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ, நேற்று(23) நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் தொடர்பான விவாதத்தில் கலந்து கொள்ளவில்லை.

ஜெனீவா தீர்மானம் மற்றும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் விசாரணை அறிக்கை தொடர்பான விவாதம் நேற்று நாடாளுமன்றில் இரண்டாவது நாளாகத் தொடர்ந்தது.

நேற்றைய விவாதத்தில், எதிர்க்கட்சி தரப்பில் ஐந்தாவது உறுப்பினராக 15 நிமிடங்கள் உரையாற்ற வாய்ப்பளிக்கப்பட்டது. இதனையடுத்து, மஹிந்த விவாதத்தில் பங்கேற்கமாட்டார் என டலஸ் அழகப்பெரும கூறியதையடுத்து, ஏனைய உறுப்பினர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X