2025 மே 19, திங்கட்கிழமை

ஐ.நா. பிரேரணையை தோற்கடிப்போம்: வாசுதேவ நாணயக்கார

George   / 2015 ஒக்டோபர் 23 , மு.ப. 08:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை மீதான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பிரேரணையை, தோல்வியடைய செய்வோம் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

இலங்கை மீதான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பிரேரணை தொடர்பிலான விவாதம், நாடாளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை (23) இடம்பெற்ற போது அங்கு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறினார்.

ஜனாதிபதி, நாடாளுமன்றம் மற்றும் மக்கள் என அனைவரும் இந்த பிரேரணையை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என தான் நம்புவதாகவும் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டார்.

அமைச்சர் ராஜித்த சேனாரத்ன கூறியதுபோல, ஜெனிவா அறிக்கையைவிட பரணகம அறிக்கை கடுமையானதாக இருந்தால் எமது நாட்டில், சாட்சிகளை விசாரித்து பரணகம அறிக்கைக்கு அமைவாக நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X