Editorial / 2019 செப்டெம்பர் 08 , பி.ப. 06:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமைச்சர் சஜித் பிரேமதாஸ ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமராகத் தெரிவு செய்யப்படுவாரென, போலிச் செய்திகள் பரவுவதாகவும் இவ்வாறான செயலை ஐக்கிய தேசியக் கட்சி செய்யாதென்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.
கம்பெரலிய வேலைத்திட்டத்தின் கீழ், கொலன்னாவை தொகுதியில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் கலந்துகொண்டு, கருத்துத் தெரிவித்தப் போதே, மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,
20 வருடங்களுக்குப் பிறகு ஐக்கிய தேசியக் கட்சியே முழுமையாக அமைச்சரவையை உருவாக்கும். அதனால், சில குழுக்கள் தேவையற்ற பயத்தை உருவாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தான் அமைச்சர் சஜித்தின் கீழ், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பிரதமராக்கவுள்ளதாக செய்திகளைப் பரப்புகின்றனர்.
ஆனால் அவ்வாறு நடக்காது. ஏனெனில் ஐக்கிய தேசியக் கட்சியின் 99 சதவீதமான உறுப்பினர்கள் ஜனாதிபதி மீது கோபத்தில் உள்ளனரென்றார்.
50 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
1 hours ago
2 hours ago