2025 மே 07, புதன்கிழமை

ஐயாவின் இறுதி நிகழ்வில் அண்ணாமலை

Editorial   / 2024 ஜூலை 04 , பி.ப. 07:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நிதர்ஷன் வினோத்

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பெருந்தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனின் இறுதி நிகழ்வுகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (07), திருகோணமலையில் நடைபெறவுள்ளது.

அவரது இறுதி அஞ்சலி நிகழ்வுகளில் பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவர் அண்ணாமலை  கலந்துகொள்ளவுள்ளார் என்பதை அவரே தன்னிடம் தொலைபேசி மூலம் உறுதிசெய்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

அதேவேளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இறுதி அஞ்சலி நிகழ்வில் பங்கேற்கும் வாய்ப்புகள் உள்ளபோதும், அதுதொடர்பில் இதுவரை உறுதிசெய்யப்படவில்லை எனவும் சிறீதரன் மேலும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X