2026 மே 06, புதன்கிழமை

ஒக்டோபர் மாதத்தில் காலி பேச்சுவார்த்தை

J.A. George   / 2021 மே 03 , மு.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கடற்படையினரால் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் சர்வதேச கடல்சார் மாநாடான 'கோல் டயலோக் - 2021" கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் ஒக்டோபர் மாதம் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது.

இந்த மாநாடு இம்முறை 11 ஆவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

‘உலகளாவிய ஸ்திரத்தன்மை மற்றும் பகிரப்பட்ட செழிப்புக்கான பிராந்திய கடல்சார் பாதுகாப்பு முயற்சிகள்’ எனும் கருப்பொருளில் இந்த மாடு இம்முறை நடைபெறுகின்றது.

இம்மாநாட்டிற்கான உத்தியோகபூர்வ இணையத்தளமான galledialogue.lk -ஐ, கடற்படை தலைமையகத்தில் வைத்து கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.

இந்த உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் சர்வதேச கடல்சார் மாநாடு தொடர்பாக இலங்கை கடற்படையினரால் வழங்கப்படும் மேலதிக மற்றும் அண்மைய தரவுகளை பெற்றுக்கொள்ளமுடியும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .