Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2016 நவம்பர் 10 , மு.ப. 03:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஜே.ஏ.ஜோர்ஜ்
“எந்தவொரு நிலையிலும் இராணுவத்துக்கு அபகீர்த்தி ஏற்படுத்த அரசாங்கம் இடம்கொடுக்காது. அங்கவீனமடைந்த இராணுவத்தினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் பின்னணியில், ஒன்றிணைந்த எதிர்கட்சிகள் தான் உள்ளன. எவ்வாறாயினும், பொலிஸார் நடத்திய கண்ணீர்ப்புகைக் குண்டுத் தாக்குதல் தொடர்பில் வருத்தத்தை தெரிவித்துக்கொள்வதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன, தெரிவித்தார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்றுப் புதன்கிழமை இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறினார்.
“இந்தவார ஆரம்பத்தில், அங்கவீனமடைந்த இராணுவத்தினர் நடத்திய போராட்டத்தின் பின்னால், அரசாங்கத்துக்கு எதிராகச் செயற்படும் ஒன்றிணைந்த எதிரணியினர் மற்றும் சில பிக்குமார்களும் உள்ளனர்.
ஜனாதிபதி செயலகத்துக்குள் அத்துமீறி முதலில் நுழைய முற்பட்டவர்கள் அங்கவீனமடைந்த இராணுவத்தினர் அல்ல. மற்றுமொரு தரப்பினர் தான் முதலில் பொலிஸார் மீதுத் தாக்குதல் மேற்கொண்டனர்.
இந்தச்சம்பவம் இடம்பெறுவதற்கு முன்னர், சில பிக்குமார்கள், அங்கவீனமடைந்த இராணுவ வீரர்களுடன் கதைத்து உசுப்பேற்றிவிட்டனர். அடுத்து, பொலிஸாரின் தடுப்பு வேலியை உடைத்து எறிந்து முன்னேறிவர்கள் அங்கவீனமடைந்த இராணுவ வீரர்கள் இல்லை. இந்த சம்பவத்துக்குப் பின்னர் அந்த பிக்குகள் மகிழ்ச்சியுடன் உள்ளனர். என மூன்று புகைப்படங்களை இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
முற்றிலும் அரசியல் நோக்கத்தை முன்வைத்து, ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகளால் இராணுவத்தினரை முன்வைத்து இவ்வாறானப் போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அங்கவீனமடைந்த இராணுவ வீரர்களுக்காக, சேவை ஓய்வூதியக் கொடுப்பனவு தொடர்பில் 2008ஆம் ஆண்டு முதல், நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. வெறுமனே பாதுகாப்பு அமைச்சு மாத்திரம் இதனைச் செய்ய முடியாது. அதற்கு நிதியமைச்சும் அனுமதியளிக்க வேண்டும். எவ்வாறாயினும், ஜனாதிபதியின் பணிப்பில் பேரில் அவர்களுக்களின் பிரச்சினைக்காணத் தீர்வுக் காணப்பட்டு விட்டது” என்றார்.
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago