2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

ஒன்றரை மாதங்களாக சுற்றித்திரிந்த சிறுமி கைது

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 04 , மு.ப. 06:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாதுக்கப் பகுதியில் கடந்த ஒன்றரை மாதங்களாக சந்தேகத்துக்கிடமான முறையில் சுற்றித்திரிந்த 17 வயதுடைய சிறுமியொருவரை, பாதுக்கப் பொலிஸின் சிறப்புப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்துள்ளதாக, பாதுக்க பொலிஸார் தெரிவித்தனர்.

க.பொ.த சாதாரண தரம் வரைப் படித்துள்ள குறித்த சிறுமியிடம், தேசிய அடையாள அட்டை இருக்கவில்லையென்றும் அவரை அடையாளப்பகுத்திக் கொள்வதற்கு அச்சிறுமியிடமும் எந்தவொரு பத்திரமும் இருக்கவில்லையென்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, கைதுசெய்யப்பட்டுள்ள சிறுமியிடம் விசாரணைகளை மேற்கொள்ள முயற்சித்த போது ஊமை போன்று நடித்ததாகவும் தெரிவித்த பொலிஸார், அவரை, அவிசாவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X