Freelancer / 2021 நவம்பர் 27 , பி.ப. 08:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென்ஆபிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரோன் கொரோனா மாறுபாடு, சுமார் 30 பிறழ்வுகளைக் கொண்டுள்ளது என்று ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் செல் உயிரியல் பிரிவின் தலைவர் டொக்டர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் என்றும் பூஸ்டர் டோஸ் நோயெதிர்ப்பை அதிரிக்கும் என்பதால், அதனைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை நன்கு தயாராக உள்ளது என்றும், இந்த மாறுபாடு தொடர்பில் தேவையற்ற அச்சத்தை உருவாக்கத் தேவையில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வைரஸை அடையாளம் காண இலங்கையில் ஆய்வுகூட வசதிகள் உள்ளதாகவும் டெல்டா வகையை விட ஒமிக்ரோன் மாறுபாடு வேகமாகப் பரவும் என்று நம்பப்படுவதாகவும் தெரிவித்தார்.
ஒமிக்ரோன் மாறுபாடு நாட்டுக்குள் நுழைவதை தாமதப்படுத்த வேண்டியதே தற்போதைய தேவை என்று கூறிய அவர், அந்த மாறுபாடு இலங்கைக்குள் நுழைவதை என்றென்றும் தடுக்க முடியாது என்றும் குறிப்பிட்டார்.
4 hours ago
4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
7 hours ago