2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

ஒரு வருட பூர்த்தியின் பின் புதிய அரசின் கணக்குகள் ஆய்வு

Gavitha   / 2016 ஏப்ரல் 25 , மு.ப. 03:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

ஊழல், மோசடி தொடர்பிலான கணக்காய்வுகள் பற்றிய பெருமளவு முறைப்பாடுகளுக்கான விசாரணைகள் தற்போது முடிவடைந்துள்ளதாகவும், அது தொடர்பிலான கோவைகள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறிய அரச கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜேசிங்க, புதிய அரசாங்கம் பதவியேற்று ஒருவருடம் பூர்த்தியானதும் அதன் கணக்கு அறிக்கைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்படும் எனவும் கூறினார்.

கண்டிக்கு சனிக்கிழமை (23)  விஜயம் மேற்கொண்டிருந்த கணக்காய்வாளர்; நாயகம் காமினி விஜேசிங்க, மல்வத்தை மகாநாயக்க தேரர்; வண. திப்பட்டுவாவே சித்தார்த்த ஸ்ரீ சுமங்கள மற்றும் அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கத் தேரரான வண. வரகாகொடை ஞானரத்ன தேரர்; ஆகியோரைச் சந்தித்து நல்லாசி பெற்றபின், ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையிலே மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு மேலும் கூறிய அவர், 'கணக்காய்வு அறிக்கைகளில் ஏதும் தவறுகள் கண்டுபிடிக்கப்பட்டால் அதனைப் பொலிஸாருக்கு, நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவுக்கு, அல்லது குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு சமர்ப்பித்து வழக்குத் தொடரும் வழமை அல்லது ஏற்பாடுகள், கணக்காய்வுத் திணைக்களத்துக்குக் கிடையாது. அதனை நாடாளுமன்றத்துக்கு  சமர்ப்பிப்பதே எமது கடமையாகும்' என்றார்.

'மேற்படி அறிக்கைகளை நாடாளுமன்றத்துக்கு  சமர்ப்பித்துள்ளபோதும் அவற்றில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக  தெரிய வருகிறது. அரச சொத்துக்களை சூறையாடுதல், ஊழல் மோசடிகளில் ஈடுபடுதல் போன்றவற்றில் பொதுமக்களது வளங்களைச் சுரண்டியவர்களுக்கு எதிராக கணக்காய்வாளர் நாயகம் திணைக்களம் நடவடிக்கை எடுப்பதில்லை என சில ஊடகங்கள் குற்றஞ்சாட்டி வருகின்றன. ஆனால், அது அவ்வாறு இல்லை.

'ஏனெனில், கணக்காய்வுத் திணைக்களத்துக்கு  எந்த அரசாங்கம், யாருடைய அரசாங்கம், எந்தக் கட்சி, எந்த அரசியல்வாதி என்ற எதுவித பாரபட்சமும் கிடையாது. கணக்கு அறிக்கை என்பது இலக்கங்களுடன் கூடிய ஓர் அறிக்கை. நாம் அரசாங்கத்தைப்பற்றி சிந்திப்பதில்லை' என்றார்.

தற்போதைய ஆட்சியில் ஊழல்,மோசடியில் ஈடுபடும்  ஆட்சியாளர்;களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லையே.

 அது ஏன்? என ஊடகவியலாளர் ஒருவர் வினவியபோது அதற்கு பதிலளித்த அவர்,  
'கணக்காய்வு செய்வதற்கு குறைந்தது ஒரு வருடம் தேவைப்படுகிறது. அதன் பின்பே எம்மால் ஆய்வுகளை மேற்கொள்ள முடியும். புதிய அரசாங்கம் பதவியேற்று இன்னும் ஒருவருடம் பூர்த்தியாகவில்லை.  ஒருவருடம் பூர்த்தியானதும் கணக்கு விபரங்கள் ஆய்வுக்குட்படுத்தப்படும்' என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X