2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

ஒரே வாரத்தில் 2,479 பேருக்கு டெங்கு

Freelancer   / 2023 ஜூன் 09 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்த மாதத்தின் முதல் வாரத்தில் 2,479 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக
தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளதுடன், கம்பஹா மாவட்டத்திலேயே அதிக டெங்கு
நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

அதற்கமைய, இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் அடையாளம் காணப்பட்டுள்ள
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 41, 883 ஆக உயர்வடைந்துள்ளது.

இவர்களில் 22.1 வீதமான டெங்கு நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்திலும் கொழும்பு
மாவட்டத்திலும் 21 வீதமான டெங்கு நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.

நாடளாவிய ரீதியில் தற்போது 67 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு அபாய வலயங்களாக பெயரிடப்பட்டுள்ளதுடன், வருடத்தின் இதுவரையான காலப்பதிக்குள் 25 பேர்
டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .