2025 ஜூலை 05, சனிக்கிழமை

ஒரு தொகை கடலாமை இறைச்சியுடன் இருவர் கைது

Editorial   / 2019 ஜனவரி 13 , மு.ப. 11:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஸீன் ரஸ்மீன்

கடலாமை இறைச்சிகளை வைத்திருந்த தாய் மற்றும் மகள் ஆகிய இருவரையும், எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்ப​டி, சிலாபம் நீதவான் நீதமன்ற நீதிபதி பீ.அபேசிங்க உத்தரவிட்டுள்ளார்.

ஆராய்ச்சிகட்டுவ – நகுல்எலிய பிரதேசத்தில் வைத்து குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வனஜீவராசிகள் மற்றும் கடற்படை அதிகாரிகள் இணைந்து மேற்கொண்ட காவல் நடவடிக்கைகளின் ​போதே, கடலாமை இறைச்சியுடன் இருவரும் நேற்று (12) கைது செய்யப்பட்டதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

அத்தோடு ஆமை ஓடுகள், ஒரு தொகை இறைச்சி, 111 ஆமை முட்டைகள் மற்றும் இறைச்சியாக்குவதற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் என்பவையும் மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .