2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

ஒஸ்திரிய யுவதி முறைப்பாடு; மசாஜ் நிபுணர் கைது

Princiya Dixci   / 2016 ஒக்டோபர் 26 , மு.ப. 06:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒஸ்திரிய யுவதி ஒருவர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில், காலி, உனவட்டுனப் பிரதேசத்தில் இயங்கி வந்த மசாஜ் நிலையத்தின், 24 வயதுடைய மசாஜ் நிபுணர், பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டில், ஹபராதுவ பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

24 வயதுடைய குறித்த ஒஸ்திரிய யுவதி, விடுமுறையின் நிமித்தம், தனது ஆண் நண்பருடன், உனவட்டுனப் பகுதிக்கு நேற்றுச் செவ்வாய்க்கிழமை (25) விஜயம் செய்துள்ளார்.

வெளிநாட்டுக் குடும்பமொன்றுடன் தான் தங்கியிருந்த நிலையில் அருகிலுள்ள குறித்த மசாஜ் நிலையத்தில் தனது, தலை மற்றும் தோள் பகுதியை மசாஜ் செய்யச் சென்ற வேளையில் மசாஜ் நிபுணர், தன்னைப் பாலியல் ரீதியில் துஷ்பிரயோகப்படுத்த முயன்றதாக, பாதிக்கப்பட்ட யுவதி, பொலிஸாரிடம் முறையிட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணையை, ஹபராதுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .