2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

ஒஸ்கார் விருதை வென்ற இந்திய பாடல்

Freelancer   / 2023 மார்ச் 13 , மு.ப. 09:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிறந்த பாடலுக்கான ஒஸ்கார் விருதை ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படத்தின் “நாட்டு நாட்டு” பாடல் வென்றுள்ளது.

இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் கடந்தாண்டு வெளியான ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படம் உலகம் முழுவதும் 1,200 கோடியை வசூலித்திருந்தது.

இப்படத்தில் நடிகர்கள் ஜூனியர் என்டிஆர், ராம் சரண், அஜய் தேவ்கன், ஆலியாபட், ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். படத்திற்கு எம்.எம்.கீரவாணி இசையமைத்திருந்தார். 

இதேவேளை, தமிழ்நாடு  நீலகிரி மாவட்டம் முதுமலையில் யானைகளை பராமரிக்கும் தம்பதியின் கதையைக் கொண்ட 'தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்' என்ற குறும் ஆவணப்படம் ஒஸ்கார் விருதை வென்றுள்ளது. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .