2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

ஓட்டோ கட்டணத்தை 1 ரூபாயால் குறைக்கலாம்

Simrith   / 2023 ஜூன் 01 , பி.ப. 01:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை மீள்திருத்தத்தின் அடிப்படையில் முச்சக்கர வண்டிக் கட்டணங்களை ஒரு ரூபாயால் குறைக்க முடியும், ஆனால் அதை நடைமுறைப்படுத்த எந்த வழிமுறையும் இல்லையென அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத் தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்துள்ளார்.

”முந்தைய மற்றும் சமீபத்திய எரிபொருள் விலை சீர்திருத்தத்தின் படி பெற்றோலின் விலை ரூ. 22 ஆல் குறைந்துள்ளது.

இரண்டு அல்லது மூன்று வார இடைவெளியில் விலை குறைக்கப்பட்டாலும், முச்சக்கரவண்டி கட்டணத்தை குறைக்க எந்த வழிமுறையும் இல்லை. பெற்றோல் விலை ரூ. 60 ஆல் குறைக்கப்பட்ட போது முச்சக்கர வண்டிக் கட்டணங்கள் முதல் கிலோமீற்றருக்கு ரூ. 100 ஆகவும் இரண்டாவது கிலோ மீற்றருக்கு ரூ. 80 ஆகவும் மட்டுப்படுத்தப்பட்டது. ஆனால் அது அமுல்படுத்தப்படவில்லை.

முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கம் கட்டணத்தை ஒழுங்குபடுத்த விரும்பினாலும், அரசாங்கமும் அதன் அதிகாரிகளும் அதனை விரும்பவில்லை” எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

நாட்டில் தற்போது கிடைக்கும் பெட்ரோல் தரமானதாக இல்லை என்பதால் அது முச்சக்கர வண்டி பயணிக்கக்கூடிய அதிகபட்ச தூரத்தை பாதித்துள்ளது  என தர்மசேகர தெரிவித்தார்.

பெட்ரோல் விலை குறைக்கப்பட்டாலும், உதிரி பாகங்கள், முச்சக்கர வண்டிக்குப் பயன்படுத்தப்படும் எண்ணெய்கள் , இதர பல சேவைகளின் விலை குறையவில்லை. ஒரு கிலோமீட்டருக்கு செலவாகும் எரிபொருளைக் கணிக்கும் போதும் மற்றும் குறிப்பிடப்பட்ட அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொள்ளும் போது, தற்போதைய முச்சக்கர வண்டி கட்டணத்தில் இருந்து ஒரு ரூபாயை மாத்திரமே குறைக்க முடியும்” என தர்மசேகர மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X