2025 ஒக்டோபர் 08, புதன்கிழமை

ஓட்டுநர் உரிமம் அச்சிடுவதில் மிகப்பெரிய ஊழல்: அமைச்சர் விளக்கம்

R.Tharaniya   / 2025 ஒக்டோபர் 08 , பி.ப. 12:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக ஒரே தனியார் நிறுவனம் ஓட்டுநர் உரிமங்களை அச்சிடுவதில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க புதன்கிழமை (08) அன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஓட்டுநர் உரிமங்களை அச்சிடும் ஒப்பந்தத்தை ஒரு நிறுவனத்திற்கு வழங்குவதன் மூலம் பெரிய அளவில் நிதிவீணடிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

ஓட்டுநர்உரிமத்தை அச்சிடுவதற்கு தனியார் நிறுவனம் ரூ.534.54 செலவாகும் என்றும், அதே நேரத்தில் RMV மூலம்ரூ. 367 செலவில் ஒன்றை அச்சிடமுடியும் என்றும் அவர் கூறினார்.

"மோட்டார் வாகனப் பதிவு துறை (RMV) மூலம் ஓட்டுநர் உரிமங்களை அச்சிடுவது என்று நாங்கள் முடிவுசெய்துள்ளோம். அதற்காக அச்சிடும் இயந்திரங்கள் நிறுவப்பட்டு வருகின்றன" என்று அமைச்சர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X