Niroshini / 2021 மே 25 , மு.ப. 05:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸுக்கு இலக்காகியுள்ள தொற்றாளர்களைக் கண்டறிவதற்காக, பிசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகளைச் செய்யும் தனியார் வைத்தியசாலைகள் மற்றும் மருத்துவ ஆய்வகங்களுக்கான வழிகாட்டல்கள், சுகாதார அமைச்சினால் திருத்தம் செய்து வெளியிடப்பட்டுள்ளன.
அந்த வகையில், பிசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைக்காகப் பெறப்படும் மாதிரிகள், உரிய பாதுகாப்பான இடத்தில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதால், வீதிகளில் மக்கள் நடந்து செல்லும் போதோ அல்லது வாகனங்களில் பயணிக்கும் போதோ (Walk in or drive through) இடைமறித்து அந்த மாதிரிகளைப் பெற்றுக்கொள்வது தடை செய்யப்பட்டுள்ளதென, அந்த வழிகாட்டல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், இந்தப் பரிசோதனைகளானவை, விசேட மருத்துவ அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட வேண்டுமென்றும் பரிசோதனைக்கான மாதிரிகளை வழங்கும் நபர்கள், அதற்கான அறிக்கைகள் கிடைக்கும் வரையில் தனிமைப்படுத்தப்பட வேண்டுமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
3 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago