Editorial / 2024 செப்டெம்பர் 16 , பி.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம். எஸ். எம். நூர்தீன்
காத்தான்குடி 6ம் குறிச்சி பிரதான வீதியில் திங்கட்கிழமை(16) மதியம் இடம் பெற்ற முச்சக்கர வண்டி விபத்தில் 3 சிறுவர்கள் காயமடைந்துள்ளனர்.
பிரத்தியேக வகுப்புக்கு சென்று விட்டு ஆறு சிறுவர்கள் முச்சக்கர வண்டியில் வீடுகளுக்கு திரும்பிக் கொண்டிருந்த போது பிரதான வீதி வழியாக வந்த மோட்டார் சைக்கிள் இராசா ஆலிம் வீதி வழியாக வந்து பிரதான வீதிக்கு ஏறிய முச்சக்கர வண்டி மோதுண்டதில் விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
முச்சக்கர வண்டியில் பயணத்த மூன்று சிறுவர்கள் காயமடைந்து காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன சேதமடைந்துள்ளன.
முச்சக்கர வண்டியில் இருந்த ஏனைய சிறுவர்களை அவ் விடத்தில் கூடிய பொது மக்கள் முச்சக்கர வண்டியில் இருந்து மீட்டு அவர்களின் வீடுகளுக்கு அனுப்ப நடவடிக்கையை மேற் கொண்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர்.
22 minute ago
37 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
37 minute ago
3 hours ago