Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Janu / 2024 ஏப்ரல் 08 , பி.ப. 01:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டியை திருடி சென்ற ஒருவரை பொலிஸார் மடக்கி பிடிக்க முற்பட்ட போது , சந்தேகநபர் வீதியால் சென்ற மாணவனின் துவிச்சக்கர வண்டியை பறித்துக்கொண்டு தப்பி சென்றுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது .
யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சென்ற ஒருவர் தனது முச்சக்கர வண்டியை அருகில் நிறுத்தி விட்டு , மருத்துவ மனைக்கு சென்று திரும்பிய போது தனது முச்சக்கர வண்டி களவாடப்பட்டதை அறிந்து அது தொடர்பில் உடனடியாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
முறைப்பாட்டையடுத்து யாழ்.மாவட்டத்தில் உள்ள ஏனைய பொலிஸ் நிலையங்களுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது .
இந் நிலையில் களவாடப்பட்ட முச்சக்கர வண்டி, யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை வீதியில் இணுவில் மத்திய கல்லூரிக்கு முன்பாக பயணித்த போது , அதனை அப்பகுதியில் கடமையில் இருந்த போக்குவரத்து பொலிஸார் கண்ணுற்று , முச்சக்கர வண்டியை வழிமறித்துள்ளனர்.
அப்போது சந்தேக நபர் முச்சக்கர வண்டியை கைவிட்டு , வீதியில் துவிச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த மாணவனின் துவிச்சக்கர வண்டியை பறித்துக்கொண்டு அதில் தப்பியோடியுள்ளார்.
முச்சக்கர வண்டியை மீட்ட பொலிஸார் , தப்பி சென்றவரை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதுடன் மாணவனிடமும் துவிச்சக்கர வண்டி பறிமுதல் செய்யப்பட்டமை தொடர்பில் வாக்கு மூலத்தை பெற்றுள்ளனர்.
எம்.றொசாந்த்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
31 minute ago
35 minute ago
41 minute ago