Janu / 2025 டிசெம்பர் 17 , பி.ப. 02:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் பொழுதுபோக்கிற்காக கட்டப்பட்ட இடமொன்றில் வைத்து ஒருவர் மீது மின்சாரம் தாக்கிய நிலையில் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்துள்ளார்.
68 வயதுடைய ஓய்வு பெற்ற மின்சார சபை ஊழியரான எல்.ரி.ஏ ரசீட் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்மாந்துறைப் பகுதியில் உள்ள செந்நெல் கிராமத்தில் குறித்த நபர் பொழுது போக்கிற்காக கட்டப்பட்ட இடத்தை வாடகை அடிப்படையில் வழங்கப்பட்டு வருவதுடன் சிலர் முன்பதிவு செய்து எடுப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதனடிப்படையில் முன்பதிவு ஒன்றை கருத்திற்கொண்டு அவ்விடத்தில் சீரற்றிருந்த மின்சாரத்தை சீர் செய்வதற்காக குறித்த நபர் அங்கு சென்றிருந்தார்.
இதன் போது ஏணியொன்றை பயன்படுத்தி மின்குமிழ் ஒன்றினை பொருத்தும் நடவடிக்கையில் ஈடுபட்ட வேளை திடீரென மின்சாரம் பாய்ந்துள்ளது. இச் சம்பவம் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காணொளியில் தெளிவாக பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பாறுக் ஷிஹான்
36 minute ago
39 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
39 minute ago
2 hours ago