2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

காட்டு யானை அட்டகாசம்: பெண் பலி

George   / 2016 ஒக்டோபர் 04 , மு.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி பொலன்னறுவை, கதுருவெல பிரதேசத்தில் வசிக்கு பெண் பலியாகியுள்ளார்.

இன்று செவ்வாய்க்கிழமை(04) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 64 வயது பெண் உயிரிழந்துள்ளதுடன், அவரது வீட்டில் வைத்து காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

குறித்த காட்டு யானை பெண் மீது தாக்குதல் மேற்கொண்ட பின்னர், கதுருவெல நகரத்தில் உள்ள பாடசாலையில் மதிலுக்கும் சேதம் ஏற்படுத்தியுள்ளது.

திவுலான காட்டுப்பகுதியில் இருந்து வந்ததாகக் கூறப்படும் இந்த காட்டு யானை, பின்னர் பொலன்னறுவை கல்லுல்ல காட்டுப்பகுதியை நோக்கிச் சென்றுள்ளதாக யானையைக் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .