2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

கொட்டதெனியாவின் பாதுகாப்பு அதிகரிப்பு: இருவர் கைது

Kanagaraj   / 2015 செப்டெம்பர் 15 , பி.ப. 01:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு கழுந்துநெரித்து கொலைசெய்யப்பட்ட 5 வயதான செயா சந்தவமியின் வீட்டை சுற்றி 2,000 அதிகமானோர் குழுமியிருப்பதால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவரது சடலம் இறுதி கிரியைகளுக்காக கம்பஹா, கொட்டதெனியாவ, அகரங்கஹ பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.

கம்பஹா, கொட்டதெனியாவ, அகரங்கஹ பகுதியில் வெள்ளிக்கிழமை (11) இரவு வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த வேளை காணாமல் போன 5 வயது சிறுமி, ஞாயிற்றுக்கிழமை(12) காலை சடலமாக மீட்கப்பட்டார்.

அச்சிறுமி, பாலியல் துஷ்பிரயோகப்படுத்தப்பட்டு பட்டியொன்றினால் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
சிறுமியின் இறுதி கிரியை நிறைவடைந்ததன் பின்னர் சந்தேகநபரை கைதுசெய்யுமாறு கோரி அவரது வீட்டுக்குள் பலவந்தமாக நுழைந்த இருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இந்த 2,000 பேரில் காலி, மாத்தறை மற்றும் குருநாகல் பகுதியில் இருந்து வந்தவர்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தின் பாவி அல்லது பாவிகள் யார் என்பதை வெளிப்படுத்த வேண்டும் என்றும் அங்கு குழுமியிருந்தோர் கோரியிருந்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .