2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

குடிநீர் இல்லாமல் 2,000 பாடசாலைகள்

George   / 2015 செப்டெம்பர் 14 , பி.ப. 11:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை முழுவதும் சுமார் 2,000 பாடசாலைகள் சுத்தமான குடிநீர் இல்லாத நிலையில் உள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம், நேற்று திங்கட்கிழமை(14) தெரிவித்துள்ளார்.

அத்துடன், எந்தவிதமான மலசலகூட வசதிகள் இன்றி சுமார் 500 பாடசாலைகள் உள்ளதுடன், ஒரு மலசலகூடத்துடன் மாத்திரம் 2,000 பாடசாலைகள் உள்ளதாகவும் அவர் கூறினார்.

கணினி, ஆய்வுக்கூடம், நூலகம் இல்லதாக நிலையில் சுமார் 4,000 பாடசாலைகள் உள்ளதாகவும்  அவர் கூறியுள்ளார்.

தெரிவுசெய்யப்பட்ட சுமார் 150 பாடசாலைகளுக்கு விஞ்ஞான உபகரணங்களை பிரித்துக் கொடுக்கும் நிகழ்வு, குருநாகலில் இடம்பெற்ற போது அவர் இதனை குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .