2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

கோடி ரூபாய் வெளிநாட்டு பணத்துடன் ஆண், பெண் கைது

George   / 2016 பெப்ரவரி 01 , மு.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒரு தொகை சட்டவிரோத வெளிநாட்டு பணத்துடன் தாய்லாந்தின் பேங்கொக் நோக்கி செல்ல முயன்ற பெண் மற்றும் ஆண் ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சுமார் 1 கோடி 25 இலட்சம் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான வெளிநாட்டு பணம் இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.

பிலியந்தலை பிரதேசத்தைச் சேரந்த 45 வயது பெண் மற்றும் 27 வயது ஆண் ஆகிய இருவரே வைதுசெய்யப்பட்டுள்ளனர். 
அவர்களது பயணப் பொதியில் இருந்து 80,800 அமெரிக்க டொலர் மற்றும் சுவிஸ் பிரேங் 6,000 ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளதாக விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேலும் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X