Kogilavani / 2017 ஏப்ரல் 09 , மு.ப. 09:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ் – சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு, வாகன சாரதிகளுக்கான போக்குவரத்து விதிகளில், சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ள அதேவேளை, போக்குவரத்து விதிமுறைச் சட்டங்களும் கடுமையாக அமுல்படுத்தப்பட்டுள்ளதாக, போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பெருநாள் காலத்தில், தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலையும் விபத்துகளையும் தடுக்கும் முகமாகவே, இவ்வாறான திட்டங்களை அமுல்படுத்தியுள்ளதாக, பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
இதற்கமைய, சாரதிகள் தமது இடதுபக்க ஒழுங்கில் வாகனத்தை செலுத்துமாறும் வேறு வாகனத்தை முன்னோக்கிச் செல்ல முற்படும்போது மாத்திரம், வலது பக்க ஒழுங்கையைப் பயன்படுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், கட்டுப்படுத்தக்கூடிய வேகத்தில் வாகனத்தைச் செலுத்த வேண்டும் எனவும் பொலிஸார் கேட்டுக் கொண்டனர்.
இதேவேளை, மதுபோதையில் வாகனத்தை செலுத்தும் சாரதிகளைக் கைது செய்ய, 24 மணி நேரமும் கண்காணிப்புப் பணிகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
2 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
6 hours ago