Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kanagaraj / 2016 ஜூன் 14 , மு.ப. 02:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
2015ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் திகதியிலிருந்து டிசெம்பர் 31ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில், தீர்ப்பளிக்கப்பட்ட மற்றும் விளக்கமறியலில் வைக்கப்பட்ட கைதிகளில் 82 பேர்,சிறைக்காவலில் இருந்தபோதே உயிரிழந்துள்ளதாக, சிறைச்சாலைகள் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறைச்சாலைகள் திணைக்களததின் 2015ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கையிலேயே, மேற்கண்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த 82 பேரில், குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட கைதிகள் 48 பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்ட கைதிகள் 34 பேரும் உள்ளடங்குகின்றனர். இவர்களில், பெண்கள் நால்வராவர்.
குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட கைதிகள் 127 பேரும் ஏனைய கைதிகள் 27 பேரும் உள்ளடங்கலாக 154 கைதிகள், சிறைச்சாலைகளிலிருந்து 2015ஆம் ஆண்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மரண தண்டனை விதிக்கப்பட்ட ஆண் கைதிகள் 620 பேரும் பெண் கைதிகள் 26 பேருமென 646 பேர், நாட்டிலுள்ள வெவ்வேறு சிறைச்சாலைகளில் உள்ளனரெனவும் தகவல் வழங்கப்பட்டுள்ளது.
அதேவேளை, வெளிநாட்டுக் கைதிகளில், குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட ஆண் கைதிகள் 62 பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஆண் கைதிகள் 106 பேரும் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட பெண் கைதிகள் 11 பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பெண் கைதிகள் 3 பேருமாக 182 பேர், சிறைகளிலுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
2015ஆம் ஆண்டில், சுதந்திரதினத்தன்று 554 கைதிகளும் வெசாக் போயா தினத்தன்று 492 பேரும் பாப்பரசரின் இலங்கைக்கான விஜயத்தின் போது 619 பேரும் நத்தார் தினத்தன்று 553 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன், தண்டனைக்காலம் நிறைவடைந்த 7,168 கைதிகளும் உள்ளடங்கலாக, சிறைக் கைதிகள் 9,386 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .