2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

குதித்த வீரரின் பிருடத்தை பதம் பார்த்தது கம்பிகள்

Niroshini   / 2016 செப்டெம்பர் 08 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சனத் கமகே

முல்லைத்தீவில் கடமையாற்றும் கடற் படைவீரர் ஒருவரின் பிருடத்தைத் துளைத்த கொங்றீட் கம்பிகள், சுமார் 45 நிமிடங்கள் மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சையில் அகற்றியெடுக்கப்பட்ட சம்பவம், ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் குறித்துத் தெரியவருவதாவது,

கதிர்காமப் பகுதியைச் சேர்ந்த துஷ்யந்த சமரவிக்கிரம (வயது 34) எனும் மேற்படிக் கடற்படை வீரர், கதிர்காமம் டிப்போவுக்குச் இலங்கைப் போக்குவரத்துச் சேவை பஸ்ஸொன்றில் பயணித்தார். பஸ் பயணித்துகொண்டிருந்த போதே அவர் பஸ்ஸிருந்து குதித்து இறங்கினார். அருகே வெட்டப்பட்டிருந்த குழியில் விழுந்துள்ளார்.

இதன்போது, 25 அடி ஆழம் கொண்ட அக்குழியிலிருந்த கொங்றீட் கம்பிகள், அவரது பிருடத்தைத் துளைத்துள்ளன.

காயமடைந்த கடற்படை வீரர், ஆரம்பத்தில் கதிர்காமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் திஸ்ஸமஹாராம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அம்புலன்ஸ்வண்டியில் ஏற்றிச்சென்றபோது அவரால் அமரமுடியவில்லை. ஆகையால் அவர் வேதனையையும் பொறுத்துகொண்டு நின்றுக்கொண்டே பயணித்துள்ளார்.

இந்நிலையிலேயே, ஒரு வைத்தியக்குழுவை நியமித்து சுமார் 45 நிமிடங்கள் மேற்கொண்ட அறுவை சிகிச்சையில் குறித்த கொங்றீட் கம்பிகள் அகற்றப்பட்டதாக ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலை வைத்தியர் டொக்டர் சுமித் மனதுங்க தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X