2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

கூரையின் மீதேறி கைதி உண்ணாவிரதம்

Kanagaraj   / 2016 ஜூன் 11 , மு.ப. 09:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

அநுராதபுரம் சிறைச்சாலையில், 45 வயதான கைதியொருவர் சிறைச்சாலைக் கட்டடத்தின் கூரையின் மீதேறி, உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தன்னுடைய மகளை பார்ப்பதற்காக தன்னை விடுதலை செய்யுமாறு கோரியே, இந்த உண்ணாவிரதப்போராட்டத்தை இன்று சனிக்கிழமை ஆரம்பித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

களவு மற்றும் கொள்ளைச் சம்பவங்களில் குற்றவாளியாக்கப்பட்ட அவர், 2020வரையிலும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

கூரையில் இருக்கின்ற கைதியை கீழே இறக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாகவும் அவ்வதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .