Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2017 பெப்ரவரி 02 , மு.ப. 04:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
குற்றத்தடுப்புக் கட்டளைச் சட்டத்தை திருத்துவதற்கான சட்ட மூலத்தை, அரசாங்க வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் பின்னர் அனுமதிக்காக வேண்டி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும், அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.
இது குறித்து நீதியமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கே, அமைச்சரவையின் அங்கிகாரம் கிடைக்கப்பெற்றுள்ளது.
“சந்தேகநபரொருவரின் விரல் அடையாளத்தை, குற்றத்தடுப்புக் கட்டளைச் சட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள குற்றப்பட்டியலில் உள்ள குற்றங்களுக்காக மாத்திரமே, பெற்றுக்கொள்ள முடியும்.
எமது சட்டவாக்கங்களில் உள்ளடக்கப்பட்டுள்ள புதிய குற்றங்களின் பாரதூரத் தன்மையினால், இச்சட்டத்தைத் திருத்தம் செய்யும் அவசியம் எழுந்துள்ளது.
இதற்கமைய, அத்தகைய குற்றங்கள் தொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்ட நபர்களின் ஆளடையாளத்தை உறுதி செய்து கொள்ளல் மற்றும் அவர்களை கண்காணிப்பதை இலகுபடுத்துவதற்காக, அவர்களின் விரல் அடையாளங்களை பெற்றுக்கொள்ளும் வகையில், குற்றங்கள் பட்டியலைத் திருத்தம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
மேலும், அவ்வகையான குற்றமொன்றில் சம்பந்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் சந்தேகநபர் ஒருவருக்கு, இடைநிறுத்தப்பட்ட தண்டனையொன்றே விதிக்கப்படுகிறது. இந்நிலையில், அந்நபர் தொடர்பாக முன்னைய தவறுகள் நிரூபிக்கப்பட்டிருக்கும் போது, இடைநிறுத்தப்பட்ட தண்டனை வலுவிலிருக்கும் காலம் முடியும் வரை, அந்நபரை பொலிஸ் கண்காணிப்பின் கீழ் வைக்க வேண்டும்.
இதற்காக, நீதிமன்றத்தால் விதிக்கப்பட முடியுமான வகையில், குற்றத்தடுப்புக் கட்டளைச் சட்டத்தினைத் திருத்துவதற்கான சட்ட மூலத்தை, வர்த்தமானியில் வெளியிட வேண்டும். பின்னர், அனுமதிக்காக வேண்டி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்” என, நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கே, அமைச்சரவையின் அங்கிகாரம் கிடைக்கப்பெற்றுள்ளது.
9 minute ago
15 minute ago
21 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
15 minute ago
21 minute ago