Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Thipaan / 2015 செப்டெம்பர் 09 , மு.ப. 04:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.எஸ். செல்வநாயகம்
கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தி திட்டச்செயற்பாடுகளை நிறுத்தக்கோரி, மீனவர் சங்கம் தாக்கல் செய்த மனுவுக்கு, நவம்பர் 11ஆம் திகதியன்று மேலும் ஆதாரம் சேர்க்குமாறு உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இந்த வழக்கை பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் உள்ளிட்ட மூவர் கொண்ட குழுமம் ஆராய்ந்தது.
நீர்கொழும்புக்கும் கொழும்புக்கும் இடையில் உள்ள கடலிலிருந்து, 233 ஹெக்டேயரை நிரப்புவதற்கான மணலை அகழ்வதனால் கடற்கரை பகுதியில் வாழும் 30 ஆயிரம் மீனவர்களின் வாழ்க்கை மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
பவளப்பாறைகளுக்கு அருகில் மணல் அகழப்பட்டதால் கடற்கரைகள் நீரில் மூழ்கி வருவதாகவும், மீன் எதுவும் அகப்படுவதில்லை எனவும் மீனவர்கள் முறையிட்டுள்ளனர்.
முன்னைய அரசாங்கம் எனப்படும் சீனக் கம்பனியும் இந்த திட்டத்துக்கான ஒப்பந்தத்தை எப்போது கைச்சாத்திட்டன என்பது தெரியவில்லை என்றும் அவர்கள் கூறினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
6 hours ago
7 hours ago