2024 மே 02, வியாழக்கிழமை

கங்கையில் யாரும் குளிக்க வேண்டாம்

Mithuna   / 2024 பெப்ரவரி 29 , பி.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் புனித நதிகளில் ஒன்று கங்கை. இமயமலையில் இந்த நதி உருவாகி பல மாநிலங்கள் வழியாக கடந்து சென்று மேற்கு வங்க மாநிலத்தில் கடலில் கலக்கிறது. கங்கை நதியில் நீராடினால் அனைத்து பாவங்களும் போகும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. இதனால் ஒவ்வொரு ஆண்டும் பல கோடி பேர் கங்கை நதியில் நீராடுகிறார்கள்.

இந்நிலையில் மேற்கு வங்கத்தில் பாயும் கங்கை ஆறு பொதுமக்கள் குளிக்க தகுதியில்லாத இடமாக மாறியுள்ளதாக தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அறிவித்துள்ளது. மேலும், ஒருநாளைக்கு 258 மில்லியன் லிட்டர் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நேரடியாக ஆற்றில் கலக்கிறது. இதனால் பாக்டீரியா வைரஸ் பரவல் அதிகம் இருப்பதால் பொதுமக்கள் யாரும் கங்கை நதியில் குளிக்க வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .