Freelancer / 2026 ஜனவரி 25 , மு.ப. 07:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச பொலிஸாரால் ‘சிவப்பு அறிவித்தல்’ பிறப்பிக்கப்பட்டு தேடப்பட்டு வந்த திட்டமிட்ட குற்றக்கும்பல் உறுப்பினரான ஹேவாபேடிகே தினூஷ சதுரங்க எனப்படும் 'கெசெல்வத்த தினூஷ', நேற்று மாலை இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்.
இந்தியாவின் சென்னையில் தங்கியிருந்த அவரைக் கைது செய்த குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குழு, பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நேற்று மாலை 4:15 அளவில் இண்டிகோ விமான சேவைக்குச் சொந்தமான விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.
விமான நிலையத்தை வந்தடைந்த அவரை, அங்குள்ள குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் பொறுப்பேற்றனர்.
அவரிடம் ஆரம்பக்கட்ட வாக்குமூலங்கள் பெறப்பட்டதைத் தொடர்ந்து, மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு - வாழைத்தோட்டம் பொலிஸ் நிலையத்திடம் அவர் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு-12 பகுதியைச் சேர்ந்த 34 வயதான இவருக்கு எதிராகப் பல பாரதூரமான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. (a)

2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago