2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

கச்சதீவை மீட்க சரியான தருணம்: தே.மு.தி.க கூட்டத்தில் தீர்மானம்

Freelancer   / 2022 ஜூன் 03 , மு.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையிடம் இருந்து கச்சதீவை மீட்டு எடுக்க சரியான தருணம். எனவே, மத்திய அரசுக்கு உரிய அழுத்தத்தைக் கொடுத்து கச்சதீவை மீட்டெடுக்க வேண்டும் என்று தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் (தே.மு.தி.க) மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள் ஆலோனை கூட்டம்  கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமைக் கழகத்தில் நேற்று (02) நடைபெற்றது. 

 தமிழக மீனவர்களுக்கு தொடர்ந்து உயிர் சேதமும், பொருள் சேதமும் நடந்து கொண்டிருக்கிறது. மேலும் மீனவர்களின் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு தருவது. ஏற்கெனவே இலங்கையிடம் இருக்கும் படகுகளை மீட்டு எடுத்து தமிழக மீனவர்களிடம் ஒப்படைப்பது. 

இலங்கையிடம் இருந்து கச்சதீவு மீட்டு எடுக்க சரியான தருணமாகும் என்று தீர்மானிக்கப்பட்டதுடன், மத்திய அரசுக்கு உரிய அழுத்தத்தைக் கொடுத்து கச்சதீவை மீட்டெடுக்க வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .