2026 ஏப்ரல் 08, புதன்கிழமை

கஞ்சிபான இம்ரானின் தந்தை, சகோதரன் உள்ளிட்ட 6 பேரின் விளக்கமறியல் நீட்டிப்பு

Editorial   / 2019 செப்டெம்பர் 25 , பி.ப. 03:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள போதைப்பொருள் வர்த்தகரான கஞ்சிப்பான இம்ரானின் தந்தை, சகோதரர் உள்ளிட்ட 6 பேரின் விளக்கமறியல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த 12ஆம் திகதி கைதுசெய்யப்பட்ட இவர்களை, இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு கடந்த 13 ஆம் திகதி உத்தரவிட்ப்பட்டுள்ளது.

பூசா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கஞ்சிப்பான இம்ரானுக்கு அலைபேசிகள் மற்றும் சார்ஜர் ஆகியவற்றை வழங்குவதற்கு முயற்சித்த குற்றச்சாட்டில் இவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

குறித்த நபர்கள், கஞ்சிப்பான இம்ரானுக்கு வழங்கிய பொதியில் இருந்து இரண்டு அலைபேசிகள் மற்றும் இரண்டு அலைபேசி சார்ஜர் ஆகியவை கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

அதனையடுத்து,  கஞ்சிப்பான இம்ரானின் தந்தை, சகோதரர்  உள்ளிட்ட 6 பேரை ரத்கம பொலிஸார் கைதுசெய்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .