2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

கட்டாரிலிருந்து ஹெரோய்ன் கடத்திய வெளிநாட்டவர் கைது

George   / 2016 மார்ச் 07 , மு.ப. 06:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்டாரிலிருந்து ஹெரோய்ன் போதை பொருளுடன் நாட்டுக்குள் பிரவேசிக்க முயன்ற வெளிநாட்டு பிரஜை, கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர், போதை பொருள் மாத்திரைகளை விழுங்கிய நிலையில் கடத்தி வருவதாக  கிடைத்த தகவலுக்கு அமைய, விமானநிலைய பொலிஸ் போதைபொருள் ஒழிப்பு பிரிவினர் ஊடாக கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட நபர், நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் அவரது வயிற்றிலிருந்து 52 போதை வில்லைகள் வெளியில் எடுக்கப்பட்டுள்ளன.

இந்த வில்லைகளில் சுமார் 400 கிராம் ஹெரோய்ன் அடைத்து வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 28 வயதான நபரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .