Lenin Raj / 2026 ஏப்ரல் 02 , பி.ப. 01:40 - 0 - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் தற்போது நிலவும் வறட்சியான காலநிலை மற்றும் நீர் உற்பத்தித் திறன் குறைவடைதல் காரணமாக நீர் ஆதாரங்கள் வேகமாக வற்றி வருகின்றன. இந்தச் சூழ்நிலையை மேலாண்மை செய்வதற்காக, தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தலைவர் மற்றும் பொது மேலாளரினால் விசேட செயல்பாட்டுக் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
நீர் விநியோகத்தை மேற்பார்வையிடல் மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட நீர் ஆதாரங்களை வினைத்திறனாக நிர்வகித்தல்.
தற்போதுள்ள நீர் ஆதாரங்கள், உற்பத்தித் திறன் மற்றும் விநியோக முறைகளைத் தொடர்ச்சியாகக் கண்காணித்தல்.
குறித்த காலப்பகுதிக்குள் நிலைமைகளை மதிப்பீடு செய்து, எழும் சிக்கல்களுக்குத் தீர்வுகாண தினசரி மற்றும் வாராந்திர ஆய்வுகளை நடத்துதல்.
பல்வேறு துறைகளுக்கிடையிலான ஒருங்கிணைப்பை உறுதிசெய்து, பொதுமக்களுக்குப் போதுமான நீர் விநியோகத்தை வழங்க மேலாண்மை அறிக்கைகளைச் சமர்ப்பித்தல் என்பன அக்குழுவினருக்கான முக்கிய பணிகளாக அறிவுறுத்தப்பட்டுள்ளன.
நீண்ட நேர நீர்வெட்டு ஏற்படுவதைத் தடுத்தல், நுகர்வோரின் தேவைகளைப் பூர்த்தி செய்ய நீரைச் சீராக விநியோகித்தல் மற்றும் வற்றிய நீர்நிலைகள் இயல்பு நிலைக்குத் திரும்பும் வரை செயல்பாடுகளைத் தடையின்றி முன்னெடுத்தல் ஆகியவற்றை இலக்காகக் கொண்டு இக்குழு செயற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
அதேநேரம், இந்த இக்கட்டான காலப்பகுதியில் பொதுமக்கள் நீரை அத்தியாவசியத் தேவைகளுக்கு மாத்திரம் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை கேட்டுக்கொண்டுள்ளது.
25 minute ago
48 minute ago
51 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
48 minute ago
51 minute ago
1 hours ago