2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

குடத்தனையில் வாள் வெட்டு சம்பவம்: மூவர் காயம்

Freelancer   / 2025 செப்டெம்பர் 15 , மு.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ். வடமராட்சி கிழக்கு குடத்தனை பகுதியில் வாள் வெட்டுக்குழு மேற்கொண்ட தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சிக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்தில் குடத்தனை மேற்கை சேர்ந்த கோவிந்தசாமி உதயகலா (வயது 59) என்பவரும் அவரது மகன் கோவிந்தசாமி கபில்ராஜ் (வயது 25) மற்றும் அவரது மருமகனான கந்தசாமி நிதர்சன் (வயது 33) ஆகிய மூவர் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை யில் அனுமதிக்கப்பட்டனர். 

கபில்ராஜ் மற்றும் நிதர்சன் ஆகிய இருவரும் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை க்கு மாற்றப்பட்டுள்ளனர்.

நேற்று முந்தினம் சனிக்கிழமை இரவு 9.00 மணியளவில் வன்முறை கும்பல் வாள்கள் சகிதம் வீட்டிற்குள் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளது.

இதன்போது வீட்டில் இருந்த தளபாடங்களை அடித்து உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் மருதங்கேணி பொலிஸாருக்கு தகவல் வழங்கிய போதிலும் வாள் வெட்டுக்குழு இரவு 11.00 மணிக்கு பின்னர் அங்கிருந்து வெளியேறிச் சென்றபின்னரே தாமதமாக வந்ததாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .