2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

கடந்த 6 மாதங்களில் பொருளாதாரத்தில் பாரிய பின்னடைவு

Princiya Dixci   / 2016 நவம்பர் 09 , மு.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் பொருளாதாரம் கடந்த ஆறுமாத காலமாக, பாரிய பின்னடைவை நோக்கியே சென்றுள்ளது என ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.

கொழும்பில், நேற்றுச் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

கடந்த கால ஆட்சியில் தகுந்த நீதிமுறை இருந்திருந்தால் மோசடிகள் இடம்பெற்றிருக்க வாய்ப்பில்லை தானே என ஊடகவியலாளர்கள் வினவியபோது, கடந்த ஆட்சி காலத்தில் யுத்தம் மீதே அதிக கவனம் செலுத்தப்பட்டது. அத்துடன், பயங்கரவாதத்தினை இல்லாதொழிப்பதே கடந்த அரசாங்கத்தினதும், நாட்டு மக்களினதும் குறிக்கோலாக இருந்தது.

யுத்தம் முடிந்த பின்பு கண்ணிவெடி அகற்றல், வடக்கின் வசந்தம், கிழக்கின் உதயம் போன்ற செயற்றிட்டங்களுக்கான நடவடிக்கையில் ஈடுபட்டதால் மோசடி தொடர்பான விடயங்களில் கவனம் செலுத்தவில்லை. மேலும், யுத்தத்தின் பின்பு அபிவிருத்தி நோக்கிலேயே அதிகமாக செயற்பட்டோம் என அவர் பதிலளித்தார்.

தொடர்ந்து அவர் அங்கு கூறுகையில், விமான நிலையத்தில் வைத்தே அர்ஜுன் மகேந்திரன் கைதுசெய்யப்பட்டிருக்க வேண்டும். அத்துடன், ரணில் விக்ரமசிங்க பதவி விலக்கப்படுவதோடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அமைக்கப்படுகின்ற சிறப்பு குழு இந்தவிடயம் தொடர்பில் விசாரணை செய்ய வேண்டும் என்றும் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .