Editorial / 2019 ஓகஸ்ட் 23 , மு.ப. 10:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
சீனாவினால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட P 626 என்ற ஆழ்கடல் ரோந்துக் கப்பல், கடற்படையில் இணைத்துக் கொள்ளப்பட்டது.
எஸ்.எல்.என்.எஸ். பராக்கிரம என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் போர்க்கப்பலை உத்தியோகப்பூர்வமான இணைத்துக்கொள்ளும் நிகழ்வு, நேற்று மாலை கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தில் இடம்பெற்றது,
போர்க்கப்பலின் கட்டளை அதிகாரியான கெப்டன் நளீந்திர ஜெயசிங்க, ஜனாதிபதியிடம் இருந்து போர்க்கப்பலுக்கான ஆணையை பெற்றுக் கொண்டார்.
1994 கட்டப்பட்ட இந்தப் போர்க்கப்பல், 112 மீற்றர் நீளமும், 12.4 மீற்றர் அகலமும் கொண்டது.
2300 தொன் எடை கொண்ட இந்தக் கப்பலில், 18 அதிகாரிகள் உள்ளிட்ட 110 மாலுமிகள் பணியாற்றுவதற்கான வசதிகள் உள்ளன.
இந்தப் போர்க்கப்பல், ஆழ்கடலில் தேடுதல், மீட்பு நடவடிக்கைகள் மற்றும் கடல் எல்லைகளைக் கண்காணிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளது.
திருகோணமலையில் உள்ள கிழக்கு கடற்படைத் தலைமையகத்தின் கீழ் இந்தப் போர்க்கப்பல் இயங்கவுள்ளது.
16 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
2 hours ago
2 hours ago