Freelancer / 2022 டிசெம்பர் 18 , மு.ப. 07:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம் கட்டைக்காடு கடற்பரப்பில் நூற்றுக்கு மேற்பட்ட பயணிகளுடன் படகு ஒன்று தத்தளித்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் குறித்த படகை கரை சேர்ப்பதற்காக கடற்படையின் டோரா படகுகள் அப்பகுதியை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அப்பகுதி மீனவர்கள் இலங்கை கடற்படையினருக்கு கொடுத்த தகவலுக்கு அமைய கடற்படையினர் தற்போது துரித நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
படகில் உள்ளவர்கள் யார் என்பது தொடர்பாக கப்பல் கரைக்கு வந்த பின்னரே மேலதிக விவரங்களை அறிய முடியும் என தெரிவிக்கப்படுகிறது. (a)
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago