2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

கடல் வழியாக கடத்திச் செல்லப்பட்ட தங்கம் பறிமுதல்

Editorial   / 2023 ஓகஸ்ட் 31 , பி.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் இருந்து கடல் வழியாக இந்தியாவுக்கு கடத்திச்  செல்லப்பட்ட 14.8 கிலோ கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

 இலங்கையில் இருந்து கடல் வழியாக தங்கம் கடத்தப் பட்டுள்ளதாக சுங்கத்துரை அதிகாரிகளுக்கு தகவல் வழங்கப்பட்டது.

 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே களிமண்குண்டு கடற்கரை பகுதியில் புதன்கிழமை (30)  ராமநாதபுரம் சுங்கத்துறை அதிகாரிகள்  சோதனை நடத்தினர்.

இதன் போது  இலங்கையில் இருந்து கடல் வழியாக கடத்தி வரப்பட்டு இருசக்கர வாகனத்தில் எடுத்து வரப்பட்ட 14.8 கிலோ கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும்  இரு சக்கர வாகனத்தில்  தங்கம் கொண்டு வந்த ஒருவர்  இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்கத்துறை அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர்.

 எஸ்.றொசேரியன் லெம்பேட்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X