2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

‘கடவுளிடம் மாத்திரம் தான் தெரிவிக்க முடியும்’

Editorial   / 2018 நவம்பர் 26 , பி.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்பட்டமான குற்றச்சாட்டின் கீழ் தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், அதனை சரி செய்வது யார்? எங்கே சரி செய்வது?  என கேள்வியெழுப்பியுள்ள பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இப்போது அதைப் பற்றி கடவுளிடம் மாத்திரம் தான் தெரிவிக்க முடியுமென தெரிவித்துள்ளார்.

இன்று வழக்கொன்றில் ஆஜராவதற்காக, ஹோமாகம நீதவான் நீதிமன்றத்துக்கு சிறைச்சாலை பஸ் மூலம் வருகைத் தந்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

கடந்த 2012ஆம் ஆண்டு தெற்கு அதிவேக வீதியின் கொட்டாவ நுழைவாயில் பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரி மற்றும் அதிவேக வீதியின் பணியாளர்களின் கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஞானசார தேரர் நடந்துக்கொண்ட குற்றச்சாட்டின் கீழ் ஹோமாகம நீதவான் நீதிமன்றில் இடம்பெற்ற வழக்கு விசாரணையில் முன்னிலையாவதற்காக தேரர் இன்று வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து ஹோமகம நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .