Editorial / 2019 ஜூலை 15 , பி.ப. 02:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
நவம்பர் மாதம் 15ஆம் திகதி தொடக்கம் டிசெம்பர் மாதம் 7ஆம் திகதிக்கிடையில், கட்டாயமாக ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
நவம்பர் 16ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படுமாயின், செப்டம்பர் 3ஆம் திகதி வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
கூடியவரை சனிக்கிழமைகளிலேயே தேர்தலை நடத்துவதற்கு முயற்சிப்பதாகவும் மக்களுக்கும் பொருளாதாரத்துக்கு ஏற்படும் பாதிப்பை கருத்திற்கொண்டே சனிக்கிழமை தேர்தலை நடத்த முயற்சிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய நவம்பர் மாதம் 16, 23, 30ஆம் திகதிகளிலும் டிசெம்பர் மாதம் 7ஆம் திகதியும் ஜனாதிபதி தேர்தலை நடத்த முடியும். நவம்பர் மாதம் 30ஆம் திகதி தொடக்கம் டிசெம்பர் மாதம் 7ஆம் திகதிகளுக்கிடையில் சாதாரணத் தரப் பரீட்சைகள் நடைபெறுவதால் தேர்தலை நடத்துவதில் சிக்கல்கள் ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
5 hours ago
6 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
6 hours ago
6 hours ago