2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

கட்டியணைத்தது ஒரு குற்றமா?

Editorial   / 2020 ஜனவரி 10 , பி.ப. 02:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சன் ராமநாயக்க எம்.பியைக் கைது செய்யச் சென்றிருந்த மிரிஹானை பொலிஸ் நிலையத்தின் விசேட நடவடிக்கைப் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் அத்தியட்சகர் ஜயந்த பெரேராவை, ​ரஞ்சன் எம்.பி கட்டியணைத்த சம்பவம் தொடர்பில், அவ்வதிகாரியிடம் விசார​ணை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பதில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்கிரமரத்னவின் உத்தரவுக்கிணங்க, மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனால், இந்த விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளது.

பொலிஸ் பரிசோதகர் ஜயந்த பெரேராவால், நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவைக் கைதுசெய்து, அவருக்கு கைவிலங்கு மாட்டும் போதே, இந்தக் கட்டியணைப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதற்கு, பொலிஸ் பொறுப்பதிகாரி எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இது குறித்தே, விசாரணை நடத்தப்படுகிறது.

சம்பவத்தின் போது, பொலிஸ் பொறுப்பதிகாரியை ரஞ்சன் எம்.பி, ஒரேயடியாகக் கட்டியணைத்து உள்ளாரென்றும் இதன்போது அவரைத் தள்ளிவிட்டிருந்தால் அல்லது எதிர்த்திருந்தால், அது, நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் சிறப்புரிமையை மீறியிருக்கும் என்றும் அதை மய்யப்படுத்தியும் அவ்வதிகாரிக்கு எதிராக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு இருக்குமென, பொலிஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .