2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

கண்ணாடி குவளை வெடித்து ஆசிரியை - மாணவிகள் காயம்

George   / 2016 நவம்பர் 03 , மு.ப. 07:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாடசாலை ஆய்வுக்கூடத்தில் கண்ணாடி குவளை வெடித்ததில்,  விஞ்ஞான பாட ஆசிரியை மற்றும் நான்கு மாணவிகள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று புதன்கிழமை இந்த வெடிப்புச் சம்பவம் ஏற்பட்டுள்ளதாகவும்  காயமடைந்த ஆசிரியையும் மாணவிகளும் அரநாயக்க மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், அதில் இரண்டு மாணவிகள் மேலதிக சிகிச்சைக்காக கேகாலை பெரிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .