Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kanagaraj / 2016 நவம்பர் 03 , மு.ப. 11:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
செல்வநாயகம் கபிலன்
தனக்கு போதை தலைக்கேறியதால், கணவனொருவன் தன்னுடைய மனைவியை, மனிதாபிமானமற்ற முறையில் நடத்திய மிகவும் அறுவறுக்கக் கூடிய சம்பவமொன்று வடக்கில் இடம்பெற்றுள்ளது.
பாதிக்கப்பட்ட, முள்ளியவளைப் பகுதியைச் சேர்ந்த அப்பெண், யாழ்.போதான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அந்த பெண்ணின் உயிருக்கு எவ்விதமான ஆபத்துகளும் இல்லையென தெரிவித்த, அந்த வைத்தியசாலையின் வைத்தியர்கள், அப்பெண்ணுக்கு மேலதிக சிகிச்சையளித்து வருவதாகவும் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
ஒவ்வொரு நாளும் மதுபோதையில் வீட்டுக்கு வரும் கணவன், சம்பவம் தினததன்று மது தலைக்கேறிய நிலையில் வீட்டுக்கு வந்துள்ளார்.
எனினும், மனைவியோ உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளார். எனினும், அதனை பொருட்படுத்தாத அவர், உடலுறவுக்கு அழைத்துள்ளார். மனைவியோ, தனக்கு உடம்பு சரியில்லை என்று மீண்டும், மீண்டும் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தால் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரம்கொண்ட கணவன், மனைவியின் கைகள் மற்றும் கால்களை கட்டியது மட்டுமல்லாது அவருடைய வாயையும் துணியால் கட்டிவிட்டு, அந்தரங்க உறுப்புக்குள் மர்மப்பொருளொன்றை செலுத்தியுள்ளார்.
இதனால், அப்பெண்ணுக்கு இரத்தப்பெருக்கு அதிகரித்துள்ளது. நிலைமை விபரீதமானதையடுத்து, கணவன் தலைமறைவாகிவிட்டார். எனினும், தன்னை சுதாகரித்துகொண்ட அப்பெண் ஒருவாறு முடிச்சுகளை அவிழ்த்து கொண்டு, வீட்டைவிட்டு வெளியே தனக்கு நேர்ந்த கதியை அக்கம் பக்கத்தவர்களிடம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்தே, பாதிக்கப்பட்ட பெண் வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பில், விசாரணைகளை துரிதப்படுத்தியுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலைப் பொலிஸார் தெரிவித்தனர்.
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago