Editorial / 2024 ஏப்ரல் 07 , மு.ப. 10:45 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்த காலத்திலும் இப்படிப்பட்ட மனிதர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். அப்படியான சம்பவமொன்றே கடலூர் மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது,
கடலூர் மாவட்டம் நடுவீரப்பட்டு அருகே உள்ள சூரியன்பேட்டையை சேர்ந்தவர் கந்தன்(வயது 48). அரசு பஸ் கண்டக்டராக பணிபுரிந்து வந்த இவரது மனைவி ரமாவள்ளி(40). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில் உடல் நலக்குறைவுகாரணமான கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கந்தன் சிகிச்சை பலன் இன்றி வௌ்ளிக்கிழமை (05) பரிதாபமாக இறந்தார். அவரது உடலுக்கான இறுதி சடங்கு அன்று மாலை நடைபெற்றது.
கணவன் இறந்து போனதால் கடும் மன உளைச்சலில் இருந்து வந்த ரமாவள்ளி அவரது வீட்டின் கழிவறையில் திடீரென்று தன்னுயிரை மாய்க்க முயன்றார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் ரமாவள்ளியை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் சனிக்கிழமை (06) அதிகாலை பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து நடுவீரப்பட்டு பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவன் இறந்த துக்கம் தாங்காமல் மனைவி தன்னுயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
4 minute ago
16 minute ago
21 minute ago
29 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
16 minute ago
21 minute ago
29 minute ago